Latestஉலகம்

14 வயதுச் சிறுமி குழந்தை பெற்றார்! 13 வயதுச் சிறுவன் தான் தந்தை!

காட்மாண்டு,மே 10- நேபாளத்தில் 14 வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்றுள்ள நிலையில் அந்தக் குழந்தையின் தந்தை வயதோ 13 என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நேபாளத்தைச் சேர்ந்த சிறுவன் ரமேஷ் தமாங், பள்ளிக்கூடத்தில் படித்து வந்த நிலையில் அதே பள்ளியில் பபித்ரா என்ற சிறுமி படித்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்னர் ரமேஷ்-பபித்ராவும் பழகத் தொடங்கிய நிலையில் பபித்ரா கர்ப்பமானார் . இதையடுத்து அணமையில் ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். நேபாளத்தில் ஆண் மற்றும் பெண்ணின் திருமண வயது 20 என்பதால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடியாது. இதனால் ரமேஷ் -பபித்ரா விஷயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர் போலீசார்.

இதனிடையே திருமண வயதை அடைந்ததும் பபித்ராவை ரமேஷ் திருமணம் செய்து கொள்வான் என அவனது குடும்பத்தினர் உறுதியுடன் கூறியுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker