Latestமலேசியா

சண்டாக்கான் இடைத்தேர்தல்; பலத்த போலீஸ் பாதுகாப்பு! வாக்களிப்பு தொடர்கிறது!

சண்டாக்கான், மே.11-   இன்று நடைபெறும் சண்டாக்கான் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல்  வாக்களிப்பு தொடங்கி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில்,  136 போலிஸ் அதிகாரிகள்  பாதுகாப்பு பணியில் ஈடுப்படுவர் என மாவட்ட காவல்படை தலைவர் துணை ஆணையர் முகமட் அஸார் அமின் தெரிவித்தார்.

இந்த இடைத்தேர்தலுக்காக திறக்கப்பட்டுள்ள 19 வாக்கு மையங்களில் அந்த 136 போலீஸ் அதிகாரிகளும் காலை 7.30 மணி தொடங்கி மாலை 5.30 மணி வரை பணியில் இருப்பர்.
வாக்கு சாவடிகளில் எந்தவொறு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இந்த இடைத் தேர்தலில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளவும் காவல் துறை தயாராக உள்ளது. எந்தவொறு இடையூறும் இல்லாமல் இந்த இடைத் தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை காவல் துறை உறுதி செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களும் வந்து வாக்களித்து குடிமக்களாக தங்களின் கடமையை நிறைவேற்ற வேண்டும். மேலும் சர்ச்சைகளைத் தவிர்க்க வாக்காளர்கள் முடிந்தவரை விரைவாக வந்து வாக்களிக்க வேண்டும் எனவும் துணை ஆணையர் கேட்டுக் கொண்டார்.

சண்டாக்கன் தொகுதியில் சுமார் 39,684 தகுதி பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். கணக்கெடுப்பின் படி அவர்களில் 50.52 விழுக்காட்டினர் பெண்களும் 49.48 விழுக்காட்டினர் ஆண்களும் ஆவர்.

மேலும் இத்தொகுதியில் 51 விழுக்காட்டினர் சீன சமூகத்தைச் சார்ந்தவர்கள். மீதமுள்ள 49 விழுக்காட்டினர் இஸ்லாமிய பூமி புத்ரா, இதர சமூகத்தை சார்ந்தவர்கள் ஆவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே காவல் துறையினர் மற்றும் இதர தகுதி அடிப்படையிலான துறையைச் சார்ந்தவர்களும் கடந்த மே 7ஆம் தேதியன்று முன் வாக்கு பதிவு செய்துள்ளனர். இந்த முன்வாக்கு பதிவில் 270 வாக்காளர்கள் உள்ள நிலையில் சுமார் 75 விழுக்காட்டினர் மட்டுமே வாக்கு செலுத்தியுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker