Latestமலேசியா

சிறார் பாதுகாப்பு: சிறப்பு இலாகா அமைக்கப்படும்! -ஹன்னா இயோ

கோலாலம்பூர், மே.11- சிறார் பாதுகாப்பு விவகாரங்களை எதிர்கொள்வதற்கு அவர்களுக்கான சிறப்பு இலாகாவை அமைக்க அரசாங்கம் திட்டம் தீட்டி வருகின்றது என மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு துறை துணையமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

தற்பொழுது ஜேகேஎம் எனப்படும் சமூக அல இலாகாவின் கீழ் சிறார் பிரிவு செயல்ப்படுகின்றது. ஆனால் அங்கு ஏராளமான விவகாரங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ் நிலை உள்ளது.

இந்நிலையில் தற்பொழுது சிறார் பாதுகாப்பு – அவர்களின் உரிமை சார்ந்த விவகாரங்களை கையாளுவதற்கு ஒரு தனி இலாகா அவசியமாக தேவைப்படுகிறது.

எனவே இந்த சிறப்பு இலாகா உருவாக்கி செயல்ப்படுத்த அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருகின்றது என இன்று இங்குள்ள தாமான் தாசேக் மெஞ்சாலாராவில் நடைப்பெற்ற அன்னையர் தின சிறப்பு நிகழ்வில் கலந்துக் கொண்ட அவர் கருத்துரைத்தார். இ ந் நிகழ்வில் அவர் அன்னையர்களுக்கு பூ கொத்து வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இருப்பினும் இந்த இலாகாவை உடனடியாக வடிவமைத்து செயல்ப்படுத்த முடியாது. எந்தவொறு குறைபாடுகளுமின்றி இந்த இலாகாவை உருவாக்க போதிய கால அவகாசம் தேவை.
மேலும் சிறார் பாதுகாப்பை வலுப்படுத்த நாட்டில் சிறார் விவகாரங்களுக்கான சிறப்பு ஆணையரும் நியமிக்கப்படவுள்ளார்.

இதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் முடுவுற்றது. இப்பதவிக்கு தகுந்த நபர்களை தேர்ந்தெடுக்கவுள்ளோம். அதற்கான பெயர் பட்டியலும் பிரதமரின் பார்வைக்கு அனுப்பிவிட்டோம். ஆணையரை பிரதமர் நியமிக்க தற்பொழுது காத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த நியமனம் முழுக்க முழுக்க சுஹாகாம் எனப்படும் மனித உரிமை ஆணையம் சம்பந்தப்பட்டது தவிர நாடாளுமன்றத்திற்கு எவ்வித தொடர்பும் கிடையாது.
நியமிக்கப்படவுள்ள இந்த ஆணையர் சிறார் பாதுகாப்பு குறித்த சட்ட விவகாரங்களையும் கவனிப்பார் என துணையமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே சிறார்களின் பாதுகாப்பிற்கு ஊரு விளைவிப்பது யாராக இருந்தாலும் அவர்களின் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அது பெற்றோர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் அதுவே பொருந்தும்

உரிமை உள்ளதால் சிறார்களுக்கு நெருக்கமானவர்கள் கூட அவர்களுக்கு தீங்கு விளைவிக்கலாம் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker