Latestமலேசியா

ஜெரான்டோட் அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் மரணம்.

ஜெராந்துட், மே.11- கம்போங் தெபிங் திங்கியில் மூன்று கார்கள் மோதி கொண்டதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று பிற்பகல் 1 மணியளவில் நடந்த இவ்விபத்தில் அலுவலக சுத்தம் செய்யும் தொழில் செய்பவரான நூர் ராசாலினா அபு காசிம் (வயது 44) ஓட்டி வந்த புரோட்டோன் எக்சோரா வகை காரும் மிட்சுபிஷி டிரிடோன் கார் ஓட்டுனருமான கோ கூன் லியாங் (வயது 37) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் கூறப்பட்டது.

இச்சம்பவம் குறித்து பிற்பகல் 1:05 மணியளவில் தகவல் கிடைக்கப் பெற்றதை அடுத்து ஜெராந்துட் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையைச் சேர்ந்த 8 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ஜெராந்துட் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவின் உதவித் தலைவரான முகம்மட் சுல்கிஃப்லி முகம்மட் சாய்னால் கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் புரோட்டோன் அக்சியா காரினுள் கடுமையான காயங்களுடன் மாட்டி கொண்ட இருவரை கார் பாகங்களை வெட்டி மீட்டனர். மேலும், நூர் ராசலினாவின் உடல் காருக்கு வெளியிலும் கோ கூன் லியாங்கின் உடல் சாலையின் அருகாமையிலுள்ள கால்வாயில் தூக்கி வீசப்பட்டு பின்னர் அவரின் உடலை அங்கிருந்து தீயணைப்பு வீரர்கள் கண்டெடுத்தாக முகம்மட் சுல்கிஃப்லி முகம்மட் சாய்னால் கூறினார்.

இவ்விருவரின் உடலையும் மேல் விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முகம்மட் சுல்கிஃப்லி முகம்மட் சாய்னால் தெரிவித்தார்.
இவ்விபத்து ஜாலான் ஜெராந்துடிலிருந்து தெமெர்லோவிற்கு செல்லும் வழியில் நடந்ததாகவும் மிட்சுபிஷி டிரிடோன் கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த புரொட்டோன் அக்சோர மற்றும் புரொடுவா அக்சியா காரை மோதித் தள்ளியதாக முகம்மட் சுல்கிஃப்லி முகம்மட் சாய்னால் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker