Latestஉலகம்

தனிமையில் வாடிய சிறுவன்: நெகிழ்ச்சி கொண்ட போலீசார்!

டல்லாஹாசி, மே.11-தனிமையில் விடப்பட்ட 6 வயதுச் சிறுவன் ஒருவன், போலீஸ் அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு ‘என்னுடன் நண்பனாக இருக்க முடியுமா?” என்று கேட்டுள்ள இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது்.Demand police company

அமெரிக்கா, புளோரிடா மாநிலத்தில் டல்லஹாசி போலீசாரிடம் அவசர எண்ணிற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது . அதில் எதிர்முனையில் பேசிய சிறுவன் ஒருவன், “நான் தனிமையில் விடப்பட்டு உள்ளேன். எனக்கு நண்பராக இருப்பீர்களா?’ என்று கேட்டுள்ளான்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக அந்த சிறுவனின் வீட்டிற்கு பொம்மையுடன் வந்து அந்த சிறுவனை சந்தித்துப் பேசி, போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சுற்றிக் காட்டி சிறுவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

மேலும் அவசர எண் என்றால் என்ன, அவற்றின் பயன்பாடு என்ன என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளனர்.

சிறுவனைச் சந்தித்து பேசிய போலீசார், “எங்களுக்கு புதிய நண்பன் கிடைத்து உள்ளான்” என்று பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். வேகமாக சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகில் மனிதர்களும் காலத்திற்கேற்றார் போல் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி ஓடும் பெற்றோர்கள் பயணத்தில் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குவது பிள்ளைகளுக்கு ஆறுதலாக இருப்பது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் இல்லாமல் மறைந்து போய்விடுகின்றன. அப்படி தனிமையில் வாடும் பல குழந்தைகளில் ஒருவர்தான் இந்த ஆறு வயது சிறுவன் என்பதை வெளிப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker