Latestமலேசியா

பேரரசரின் முடிவை பாஸ் மதிக்க வேண்டும் ! – குவான் எங்

கோலாலம்பூர், மே 11 –  நாட்டின் அடுத்த பிரதமராக ஒரு குற்றவாளி  வரக்கூடும் என பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ தாக்கியூடின் ஹசான் குறிப்பிட்டதை நிதியமைச்சர் லிம் குவான் எங் சாடியுள்ளார்.

டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு முந்தைய பேரரசர் ஐந்தாம் முகமட் முழு மன்னிப்பை  2018ஆம் ஆண்டு மே மாதம் வழங்கியுள்ளார்.

கிளந்தான் மாநில சுல்தானாக இருக்கும் சுல்தான் ஐந்தாம் முகமட்டின் முடிவை தாக்கியூடின் ஏற்றுக் கொள்ளவில்லையா? அல்லது அவருக்கு மதிப்பை அளிக்கவில்லையா? என குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோத்தாபாரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தாக்கியூடின் தமது மாநில சுல்தான் வழங்கிய மன்னிப்பை சிறுமைப் படுத்துகிறாரா? என குவான் எங் வினவினார்.

பேரரசர் வழங்கிய மன்னிப்பானது, முழுமையான மன்னிப்பு ஆகும். அன்வாரின் அனைத்துவித குற்றப் பதிவுகளும் ரத்து செய்யப்பட்டு அவர் குற்றமற்றவராகத் திகழ்கிறார். ஒரு வழக்கறிஞராக இருக்கும் தாக்கியூடினுக்கு இது தெரியாதா?

இப்போது யார் பேரரசரை  எதிர்ப்பது என குவான் எங் தமது டுவிட்டார் அகப்பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் மலேசிய கினிக்குப் பேட்டியளித்த தாக்கியூடின், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு முன்னாள் கைதி,  வாழ்நாள் முழுக்க குற்றவாளியாகவே கருதப்படுவார்.

கூட்டரசு நீதிமன்ற தீர்ப்பினை  யாரும் கேள்வி எழுப்பமுடியாது. ஏனெனில், அத்தீர்ப்பினை நான்கு உயர்மட்ட நீதிபதிகள் அளித்த என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த பிரதமராக  அன்வார்தான் வர வேண்டுமென பக்காத்தான் உறுப்புக் கட்சிகளிடையே உடன்பாடு  காணப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே  கடந்தாண்டு மே 16இல்  அன்வாருக்கு பேரரசரால் முழு மன்னிப்பு  வழங்கப்பட்டு   அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker