Latestமலேசியா

1 லட்சம் பேர் பதின்ம வயதில் கர்ப்பம்! -ஹன்னா

கோலாலம்பூர், மே. 11- கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இதுவரையில் பதின்ம வயதை சேர்ந்த ஒரு லட்சம் பேர் கர்ப்பமாகி இருக்கிறார்கள் என்று மகளிர் குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

இதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட 900 குழந்தைகள் கைவிடப்பட்டு இருக்கின்றன என்றுசிகாம்புட் தொகுதி எம்பியுமான அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு கைவிடப்பட்ட குழந்தைகளில் 30 விழுக்காட்டினர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர். எனவே இத்தகைய பிரச்சனைகளை களைவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை அமுல்படுத்தி வருகிறது என்று அவர் சொன்னார்.

இப்பிரச்சனையில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றது. 13 வயதில் இருந்து பள்ளி மாணவர்களுக்கான பாலியல் கல்வியை மேம்படுத்துவதற்கு கல்வி அமைச்சுடன் தற்போது தமது அமைச்சு கலந்து ஆலோசித்து வருகிறது என்று ஹன்னா இயோ தெரிவித்தார்.

தற்போது இந்த பாலியல் கல்வி ,உடற்கூறு மற்றும் சுகாதாரக் கல்வி என்கிற அடிப்படையில் போதிக்கப்பட்டு வருகிறது. எனினும், தற்போதுள்ள புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும்போது சிறுவர்களும் சிறுமிகளும் 13 வயதில் இருந்தே பல்வேறு விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரியவந்துள்ளது.

தங்களின் பதின்ம வயதுப் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதில் பெற்றோர்களும் முக்கிய பங்காற்ற வேண்டும். வீட்டிலும் வெளியிலும் அவர்களின் நடவடிக்கையை கண்காணிக்கக் கூடிய அளவு அளவிற்கு இணைய வசதி மற்றும் விவேக தொலைபேசி வசதிகளை பெற்றோர்கள் கொண்டு இருக்கிறார்கள் என்று துணை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker