Latestமலேசியா

15 வயது சிறுமிகள் கற்பழிப்பு: ஐவர் கும்பல் மீது குற்றச்சாட்டு!

சிரம்பான், மே. 11-கோலப்பிலாவில் 15 வயதுடைய இரண்டு சிறுமிகளை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்ததோடு இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டதாக ஐவர் கொண்ட கும்பல் மீது இங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இரு சிறுவர்கள் உள்பட அந்த ஐவரும் சிறைச்சாலை சீருடையுடன் நேற்று இங்குள்ள நீதிமன்றத்தில் நீதிபதி ஜுனைடா முகமட் இசா முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்.

இவர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட போது இவர்களின் குடும்பத்தினர் ஏராளமானோர் திரண்டிருந்தனர். இவர்களில் சிலர் கண்ணீர் சிந்திய வண்ணம் இருந்தனர்.

21 வயதுடைய அமீர் நஷ்ராப், 22 வயதுடைய முகம்மட் நோர்டின் ஆகிய இருவரும் தலா 2 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி இருக்கின்றனர். அதேவேளையில் 18 வயதுடைய முகமட் அரிப், மற்றும் 16 வயதுடைய 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் ஆகியோர் தலா ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருக்கின்றனர்.

இந்த ஐவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார். கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி இரவு 11.40 மணிக்கும் மே மாதம் ஒன்றாம் தேதி அதிகாலை 4.15 க்கும் இடையே கோலப் பிலாவில் உள்ள ஒரு வீட்டில் 15 வயதுடைய அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 376 (1) ஆவது பிரிவின் கீழ் அமீர் நஷ்ராப், மற்றும் முகம்மட் நோர்டின் மீதான குற்றச்சாட்டு நிருபணமானால் 20 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

மேலும் அரிப் மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரும் அதே சிறுமியுடன் ஏப்ரல் 30ஆம் தேதி 11 மணிக்கும் இரவு 11.20 க்கும் இடையே இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் 16 வயதுடைய மற்றொரு சிறுவன், பாதிக்கப்பட்ட அந்த 15 வயது சிறுமியின் தோழியான மற்றொரு 15 வயது சிறுமியிடம் அதே இடத்தில் அதே காலகட்டத்தில் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker