Latestமலேசியா

கருப்பு ‘டிண்ட்’ அனுமதியால் பாதகம்! – டாக்சி ஓட்டுனர்கள்

கோலாலம்பூர், மே 12 – வானங்களின் பக்கவாட்டுக் கண்ணாடிகளிலும் பின்பக்கக் கண்ணாடியிலும் கருப்பு டிண்ட் விதிமுறையைத் தளர்த்தியது தங்களுக்குப் பாதகமாக அமையுமென வாடகைக் காரோட்டிகள புகார் தெரிவித்துள்ளனர்.

பிக் புளூ டாக்சி நிறுவனத்தின் ஆலோசகர் ஷம்சுபாஹ்ரின் இஸ்மாயில், வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கும் பயணகளுக்கும் அந்த விதிமுறைத் தளர்வு அபாயத்தைக் கொண்டுவரும் என தெரிவித்தார்.

இதற்கு முன்னர், போலீசார் இதனை எதிர்த்ததைத் தாங்கள் ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். இது மோசமான முடிவு. ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் அது வேண்டத் தகாத அபாயத்தைக் கொண்டுவரும். ஓட்டுநர்களும் பயணிகளும் திருடப்படும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பயணிகள் கற்பழிப்பு, திருட்டு இன்னும் மற்ற அபாயத்துக்கும் உள்ளாக்கப்படும் ஆபத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker