Latestமலேசியா

சண்டாக்கான் இடைத்தேர்தல்: வாக்குப் பதிவு மோசமாக சரிந்தது ஏன்?

சண்டாக்கான், மே 12 – நேற்று நடந்த சண்டாக்கான் இடைத்தேர்தலில், 39,684 வாக்காளர்களில் 54.22 விழுக்காட்டு  வாக்காளர்களே வாக்களித்திருக்கும் நிலையில் அது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அது பற்றிக் குறிப்பிட்ட போலீஸ் ஆணையர் டத்தோ ஓமார் மம்மா,  எதிர்பார்க்கப்பட்ட 70 விழுக்காட்டு வாக்காளர்களில் வெறும் 54 விழுக்காட்டினர் மட்டுமே வந்ததிருந்ததில் தாம் மனநிறைவு கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

குறைந்த எண்ணிக்கையினரே வாக்களித்தது ஏன் என தெரியவில்லை. வாக்களிப்பு சுமுகமான முறையில் நடைபெற கடுமையான பாதுகாப்பு நடைமுறை பின்பற்றப்பட்டது. அது குறைவான வாக்காளர் எண்ணிக்கைக்குக் காரணமாக இருக்காது என அவர் குறிப்பிட்டார்.

அத்தொகுதியில் சீன வாக்காளர்கள் 51 விழுக்காடும் 45 விழுக்காட்டு முஸ்லிம் பூமிபுத்ராக்களும் எஞ்சியோர் மற்றவர்களும் அடங்குவர்.

பொதுவாக இடைத்தேர்தல்களில் வாக்குப் பதிவு குறைந்தே இருப்பது வழக்கம். ஏனெனில், தேர்தல் பரபரப்பு குறைந்திருப்பதே அதற்குக் காரணம் என அரசியல் ஆய்வாளர் ஓ எல் சன் தெரிவித்தார்.

வாக்காளர்களின் மெத்தனமே அதற்குக் காரணமாகக் கூட இருக்கலாம். ஜசெகவும் வாரிசான் சபாவும் மக்களின் பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான திட்டத்தை அறிவிக்கத் தவறியதும் அதற்குக் காரணமாக  இருக்கலாம் என சபா மலேசிய பல்கலைக் கழகத்தின் லே குவோக் தியுங் தெரிவித்தார்.

அவர்கள் 1எம்டிபி பிரச்சினையை மட்டுமே கவனத்தில் கொண்டிருந்ததாகவும் வெளியூர்  வாக்காளர்களைக் கொண்டுவந்து வாக்களிக்க வைக்கும்  முயற்சியை எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஜசெக கட்சி பணம் கொடுத்து வாக்கு வாங்கியதாக ஒரு வீடியோ கிடைத்ததாகவும் ஆனால்,  அது தெளிவில்லாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார். எனினும், அது இன்னும் ஆய்வு செய்யப்படுவதாக ஓமார் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker