Latestமலேசியா

மன்னிப்பு கிடைத்தாலும் அன்வார் முன்னாள் குற்றவாளியே! – பாஸ்

கோலாலம்பூர், மே 12 – அன்வாருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தாலும் அவரை முன்னாள் குற்றவாளி என அழைப்பது சரியே என பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ தாக்கியுடின் ஹசான் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியா கினியின் செய்தியின்படி, அம்னோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் தாக்கியுடின்,  தாம் சட்டத்தின் அடிப்படையில் உண்மையைக் கூறுவதாகத் தெரிவித்தார். அன்வாருக்கான தண்டனையை நீதிமன்றம் உறுதிப்படுத்திய பின்னர், அதனை தாம் கூறுவதாக  அவர் குறிப்பிட்டார்.

குற்றவாளிகளின் மீதான நிலைப்பாட்டை நாட்டிலுள்ள சட்டங்கள்  வெளிப்படுத்துவதாகவும், அதனை வைத்தே தாம் அப்படி கூறுவதாகத் தாக்கியுடின் குறிப்பிட்டார்.  குற்றவாளியை அடுத்த பிரதமராக்குவது சரியா? என அவர் இதற்கு முன்னர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரின் கூற்றை எதிர்த்து பிகேஆரும், ஜசெகவும் சாடியதோடு தாக்கியுடின் பேரரசர் வழங்கிய முழு மன்னிப்பைச் சிறுமைப் படுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தன.

பக்காத்தான் ஆட்சிக்கு வந்த பின்னர், அன்வாருக்கு முழு மன்னிப்பு தரப்பட்டது. அதன் பின்னர் அவர் போட்டிக்சன் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker