Latestசினிமா

‘அயோக்யா’ படம்: விஷாலின் உழைப்பை நாசமாக்கிய தமிழ் ராக்கர்ஸ்!

சென்னை மே.13- ‘அயோக்யா’ படம் வெளியான அன்றே அதை ஆன்லைனில் திரைக்காட்சியாக கசிய விட்டது தமிழ் ராக்கர்ஸ். புதுமுகம் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்த அயோக்யா படம் நேற்று முன்தினம் வெளியாக இருந்தது. சில பிரச்சனைகளால் கடைசி நேரத்தில் பட வெளியீடு தள்ளிப்போனது.

இதையடுத்து ஒரு வழியாக நேற்று படம் வெளியானது. படம் வெளியான சில மணி நேரங்களில் அதை கசிய விட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ். தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படங் களை வெளியிடுவதற்கும் -விஷாலுக்கும் ரகசிய பங்கு இருப்பதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

விஷாலுக்கும் தமிழ் ராக்கர்ஸ் ஏதோ தொடர்பு உள்ளது அதனால் தான் அவர் படங்கள் மட்டும் தாமதமாக கசிகிறது என்று கூறப்பட்ட நிலையில் அயோக்ய ரிலீசான வேகத்தில் ஆன்லைனில் வெளியாகியுள்ளது.

தமிழ் ராக்கர்ஸை கண்டு பிடித்து ஜெயிலில் தள்ளாமல் விடமாட்டேன் என்று சவால் விட்ட விஷால், அது நடக்காததால் நைசாக அந்த பொறுப்பை தமிழக அரசிடம் விட்டுவிட்டார். இத்தனை ஆண்டுகளாக அவர் செய்யாத காரியத்தை தமிழக அரசு உடனே ஏன் செய்யவில்லை என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

அயோக்யா படம் ரீமேக் என்றாலும் நன்றாக உள்ளது என்று விமர்சனம் எழுந்துள்ளது. பலர் தமிழ் ராக்கர்ஸிலிருந்து படத்தை பதிவிறக்கம் செய்துள்ளதால் வசூல் பாதிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker