Latestமலேசியா

ஆடவர் அடித்துக் கொலை! மூவர் அராஜகம்!

அலோர் ஸ்டார், மே.1 – 40 வயதுமிக்க ஆடவர் ஒருவர் மூன்று நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

இது பற்றி கொலையுண்டவரின் மைத்துனர் கூறும்போது, மூன்று பேர் அவரை  ஜாலான் தெலோக் வாஞ்சா மார்கெட் கோபோய்க்குப் பின்னால் இருக்கும் தமது வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்குக் கொண்டு வந்ததாகத்  தெரிவித்தார்.

பின்னர், ஒரு நாற்காலியில் அவரைக் கட்டி வைத்து அவரைக்  கடுமையாகத் தாக்கிய பின்னர்,  விடுவிக்க வேண்டாமென தம்மிடமும் தமது தாயாரிடமும் கூறியதாகத் தெரிவித்தார்.

அந்த மூன்று பேரும் அங்கிருந்து அகன்ற பின்னர், மாலை 4 மணியளவில் தமது மைத்துனரை  ஆம்புலன்சின் மூலம்  மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் ஆனால், இன்று, திங்கட்கிழமை அவர்  மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

தகவலறிந்து சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு விரைந்த போலீசார். அதனை உறுதிப்படுத்தியதோடு அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்திருப்பதாகவும் மேலும் இருவரைத் தேடி வருவதாகவும் கோத்தா ஸ்டார்  போலீஸ் ஏசிபி முகமட் ரோஸி தெரிவித்தார். இது குற்றவியல் சட்டம் பிரிவு 302இன் கீழ் விசாரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker