Latestவிளையாட்டு

ஒரே ரன் வித்தியாசம்: சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்ச்சி! மும்பை சாம்பியன்!

ஹைதராபாத், மே. 13- 2019 ஆம் ஆண்டிற்கான இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரேயொரு ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.

நேற்று ஹைதராபாத்தில் நடந்த இந்த இறுதி ஆட்டம் உச்சக் கட்ட பரபரப்பில் எட்டியது. கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, 8 ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பை இந்தியன்ஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.

ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்து எடுத்தது. அதே வேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்து ஒரே ரன் வித்தியாசத்தில் சாம்பியன் வாய்ப்பை கைநழுவ விட்டது.

இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் அணி , பிரிமியர் லீக் கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை நான்கு முறை வென்றுள்ளது. இதன் வழி மும்பை இந்தியன்ஸ் அணி 20 கோடி ரூபாயை சாம்பியன் பரிசாக பெற்றது. அதேவேளையில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 கோடியே 50 லட்ச ரூபாய் பரிசாக பெற்றது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker