Latestஉலகம்

சாலையில் விழுந்து தீப் பிடித்த விமானம்: 6 பேரை காப்பாற்றிய வழிப்போக்கர்!

நியூபோர்ட், மே 13- தென் வேல்ஸ் நாட்டிலுள்ள சாலை ஒன்றின் மீது சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விமானத்தில் சிக்கிக் கொண்ட ஆறு பயணிகளை அவ்வழியாகச் சென்ற ராணுவ வீரர் ஒருவர் கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் காப்பாற்றினார்.

அந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து அது சாலையில் தரை இறங்க முயன்று விபத்துக்கு உள்ளானதாக தெரியவருகிறது.

நொறுங்கிய அந்த விமானம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த நிலையில் அந்தப் பக்கமாக வந்த முன்னாள் ராணுவ வீரரான டேனியல் நிக்கல்சன் (வயது 46) என்பவர் உள்ளே சிக்கித் தவித்த 6 பயணிகளை மீட்டெடுக்க கடுமையாக போராடினார்.

எனினும் தீ கடுமையாகிக் கொண்டே இருந்ததால் விமானத்தின் முன்புற கண்ணாடியை உடைத்து அதன் வழியாக அந்த பயணிகளை அவர் காப்பாற்றினார். உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வந்த முதலுதவி வாகனம் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker