Latestவிளையாட்டு

பிரிமியர் லீக்: மன்.சிட்டி சாம்பியன்! ஏமாற்றத்தில் லிவர்புல்!

லண்டன், மே.13- இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் மன்செஸ்டர் சிட்டி குழு சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. நேற்று நடந்த கடைசி ஆட்டத்தில் பிரைட்டன் குழுவை 4 க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஒரேயொரு புள்ளி வித்தியாசத்தில் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது மன்செஸ்டர் சிட்டி.

இந்தப் போட்டியில் மன்செஸ்டர் சிட்டி குழுவுக்கு கடைசி வரையில் கடும் போட்டியை அளித்து வந்த விவர்புல் குழு கடைசி நேரத்தில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் பிரிமியர் லீக் சாம்பியனாகும் வாய்ப்பைக் கைநழுவ விட்டு ஏமாற்றத்திற்கு உள்ளானது.

பிரிமியர் லீக்கின் கடைசி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. அதாவது கடைசி ஆட்டம் வரையில் மன்செஸ்டர் சிட்டி குழுவுக்கும் லிவர்புல் குழுவுக்கும் இடையே யார் சாம்பியன் என்கிற போட்டா போட்டி நீடித்துக் கொண்டிருந்தது.

மொத்தம் 38 ஆட்டங்களை ஆடிமுடித்த மன்செஸ்டர் சிட்டி 98 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. அதேபோன்று 38 ஆட்டங்களை முடித்த லிவர்புல் குழு 97 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது.

மன்செஸ்டர் சிட்டி குழுவுக்கு எதிரான ஆட்டத்தின் போது பிரைட்டன் குழு தொடக்கத்திலேயே ஒரு கோலைப் போட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், இதனை அக்குழு நிலைநிறுத்திக் கொள்ள முடியாமல் போனது.

அடுத்தடுத்து நான்கு கோல்களை அடித்து மன்செஸ்டர் சிட்டி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. பிரீமியர் லீக் போட்டியில் மூன்றாவது இடத்தை செல்சீ குழுவும் நான்காவது இடத்தை டோட்டன்ஹாம் குழுவும் 5 ஆவது இடத்தை அர்சனல் குழுவும் ஆறாவது இடத்தை மன்செஸ்டர் யுனைட்டெட் குழுவும் பிடித்தன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker