Latestமலேசியா

போலி “ போலிஸ்” கும்பலிடம் 47,600 வெள்ளியை இழந்த மாது !

தெமர்லோ, மே.13- காவல் துறை என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட மோசடி கும்பலிடம் இப்பகுதியை சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் ஒருவர் ரிம. 47,600 வெள்ளியை இழந்துள்ளார்.

கடந்த புதன்கிழமையன்று 59 வயது மதிக்கதக்க அந்த மாதுவிற்கு புதிய எண்ணில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

மறுமுனையில் தாங்கள் டெலிகோம் நிறுவனத்தை சார்ந்தவர்கள் என அடையாளம் காட்டிக் கொண்ட நபர் அம்மாதின் தொலைபேசி எண் சட்ட விரோத சூதாட்டத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

இத்தகவலை அம்மாது மறுத்தவுடன் தொலைபேசி அழைப்பு வேறு ஒருவருக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த நபரோ தான் கோலாலம்பூர் காவல் தலைமையகத்தை சார்ந்தவர் என கூறியுள்ளார்.

அந்த மாது பணமோசடி வழக்கில் சிக்கியுள்ளதாகவும் இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் அந்த நபர் தொலைபேசி உரையாடலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விசாரணை காலக்கட்டத்தின் பொழுது அம்மாதின் வங்கி கணக்கு முடக்கப்படவுள்ளது எனவும் அதற்காக அக்கணக்கில் உள்ள பணத்தை தற்காலிக் வங்கி கணக்கு ஒன்றுக்கு மாற்ற வேண்டும் எனவும் வழக்கு விசாரணை முடிந்த பின்னர் அந்த பணம் திருப்பி தரப்படும் என அந்த நபர் இம்மாதிடம் கூறியுள்ளார்.

இதற்காக மூன்று வங்கி கணக்கு எண்களையும் அம்மாதிடம் அந்நபர் வழங்கியுள்ளார் என பகாங் மாநில காவல் துறையின் வர்த்தக குற்றிவியல் விசாரணை பிரிவு தலைவர் சுப்ரிண்டண்ட் முகமட் வாஸிர் முகமட் யூசோப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த தொலைபேசி அழைப்பினால் அச்சம் அடைந்த அந்த மாது மறு நாளன்று அந்த 3 “ தற்காலிக” வங்கி கணக்கிற்கு 11 முறை மொத்தமாக ரிம.47,600 வெள்ளியை மாற்றம் செய்துள்ளார்.

ஆனால் இவ்விவகாரத்தை தனது மகனிடம் தெரிவித்த பின்பு தான் இது மோசடி என அம்மாது உணர்ந்துள்ளார். இது தொடர்பில் அவர் நேற்று தெமர்லோ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த மோசடி விவகாரத்தை தற்பொழுது செக்‌ஷன் 420 பிரிவின் கீழ் விசாரணை செய்து வருகின்றோம். இது தொடர்பில் அந்த மூன்று வங்கி கணக்குகளையும் அடையாளம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி வழக்கு குற்றவாளிக்கு சுமார் 10 வருடங்கள் சிறை தண்டனையும் அபராதமும் பிரம்படிகளும் வழங்கப்படகூடும் எனவும் சூப்ரிண்டண்ட் முகமட் வாஸிர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker