Latestமலேசியா

ரோபோ சிகிச்சையை பயன்படுத்தும் முதல் தெற்காசிய நாடாக மலேசியா!

ஆயர் குரோ, மே.13- அதி நவீன மூட்டு பகுதிக்கான கலப்பு மின்னியல் ( ரோபா)   துணை அணி கருவியை (ஹால்) சிகிச்சைக்காக பயன்படுத்தும் முதல் தெற்காசிய நாடு என மலேசியா பெயர் பதித்துள்ளது. ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளை அடுத்து இக்கருவியை பயன்படுத்தும் நான்காவது நாடு மலேசியா என்பதும் குறிப்பிடத்தக்கது.

சொக்சோ உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக இந்த சிறப்பு கருவி தருவிக்கப்பட்டுள்ளது. இதன் வழி காயத்தினால் பாதிப்படைவோரை மிக விரைவாக குணப்படுத்த முடியும் என மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

இன்று துன் அப்துல் ரசாக் பெர்கேசோ புணர் அமைப்பு மையத்தில் தொடங்கப்பட்ட நரம்பியல் சார்ந்த மின்னியல் மருத்துவ பிரிவின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் மேற்கண்டவாறு கூறினார். இந்த பிரிவை பெர்கேசோ சுமார் ரிம.832,775 வெள்ளி செலவில் உருவாக்கியுள்ளது. தற்பொழுது இம்மையத்தில் 24 ஹால் அணி கருவிகள் உள்ளன.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சைபர்டைன் இன்ச் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த அணி கருவி சிகிச்சை வழி பக்கவாதம், விபத்து, நரம்பு தளர்ச்சி நோயாளிகளை இதர சிகிச்சைகளை காட்டிலும் கூடுதல் விரைவாக குணப்படுத்த முடியும்.

கடந்த வருடம் இறுதி தொடங்கி இதுவரை இந்த உயர்தர சிகிச்சையினால் சுமார் 100க்கும் மேற்பட்ட பெர்கேசோ உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர் என நான் கேள்வியுற்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே தற்பொழுது இந்த சொக்சோ நரம்பியல்  – மின்னியல் (ரோபா) புணர் அமைப்பு மையம் காலை 9 மணி தொடங்கி மாலை 5 வரை சேவை வழங்கி வருகின்றது. நோயாளிகளை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் அதன் சேவை நேரம் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை உயர்த்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் பெர்கேசா அமைப்பை வலியுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker