Latestமலேசியா

அன்னைக்குத் தாலாட்டு 2.0 பல்வேறு நிகழ்ச்சிகளோடு அன்னையரை ஆராதிக்கும் சமூக நிகழ்ச்சி

ஷா ஆலாம், மே 14- பல்வேறு கலை, சமூக நிகழ்ச்சிகளோடு அன்னையரை ஆராதிக்கும் நோக்கில் ‘அன்னைக்குத் தாலாட்டு 2.0’ எனும் நிகழ்ச்சி ஷா ஆலம், கெமுனிங் உத்தாரா, லாடாங் எமரால்ட் தமிழ்ப்பள்ளியில் மே 19, ஞாயிற்றுக்கிழமை காலை 9லிருந்து மாலை 5 மணி வரை நடைபெறும்.

அந்நிகழ்ச்சியில் உடல்நல பரிசோதனை, சிறு வகையான சிகிச்சை, தலை மசாஜ், மருதாணி இடுதல், குடும்ப புகைப்படம் எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் இடம்பெறும்,

அதோடு, அன்னையருக்குப் பரிசுகள் வழங்குதல், பாடல் போட்டி, போட்டி விளையாட்டுகள், உள்ளூர் கலைஞர்கள் பங்கு கொள்ளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

இலவசமாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சி வெற்றியடைய பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ளும்படி அதன் ஏற்பாட்டாளர்கள் சாம்ராஜ் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker