Latestஇந்தியா

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து! – பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்ட கமல்ஹாசன்

அரவுக்குறிச்சி,மே.14- இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து மதத்தைச் சார்ந்தவன் என பிரபல திரைப்பட பன்முக கலைஞரும் மக்கள் நீதி மய்ய அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேம் 19ஆம் தேதியன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களுக்காக கமல்ஹாசன் தற்பொழுது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். அவ்வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அவர் 4 இடைத்தேர்தல் தொகுதிகளில் ஒன்றான அரவுக்குறிச்சி பகுதியில் பிரச்சார உரை நிகழ்த்தினார்.

அப்பொழுது தமதுரையில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி மகத்மா காந்தியை கொன்ற நாதுரம் கோட்சே ஆவான். அவன் ஓர் இந்து மதத்தை சார்ந்தவன். இப்பகுதியில் அதிகளவில் முஸ்லிம் மக்கள் வாழ்கிறர்கள் என்பதற்காக நான் ஒரு தலைபட்சமாக விஷமத்துடன் இக்கருத்தை கூறவில்லை.

காந்தியின் சிலையை இங்கு கண்டதால் கூறுகின்றேன். மேலும் நான் என்னை காந்தியின் கொள்ளு பேரானாக கருதுகின்றேன். கடந்த 1948 ஆம் ஆண்டு நடந்த அவரின் படுகொலைக்கு பதில் கேட்டே தற்பொழுது இங்கு நான் வந்துள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.

இந்திய தேசத்தின் நல்ல குடிமக்கள் இங்கு சமத்துவத்தையே விரும்புகின்றனர். அவர்களைப் போலவே நானும் தேசியக் கொடியில் உள்ள மூன்று வர்ணங்களும் அப்படியே தொடர்ந்து நிலையத்திருக்க விரும்புகிறேன். நானும் ஓர் இந்தியன் தான். அதனை பெருமையாக கூறி கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.

கமல்ஹாசனின் இந்த கருத்திற்கு உலகளவில் இந்து மத நம்பிக்கையை சார்ந்த மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அவர் பாஜக அரசியல் கொள்கையை கடுமையாக எதிர்த்து வருகின்றார். இக்கருத்தும் அவர் எதிர்ப்பின் வெளிபாடுகளில் ஒன்று தான் என மக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தராஜன்,மகாத்மா காந்தியின் மரணம் ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சி அடையச் செய்தது. யாரும் அந்த படுகொலையை ஆதரிக்கவில்லை. கோட்சேவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதே இதற்கு சான்றாகும். தற்பொழுது கமல்ஹாசன் தனது சொந்த அரசியல் லாபத்திற்காக இது போன்ற தவறான கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றார்.

முன்பு அவர் இயக்கியிருந்த ‘விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கு பல முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து தடை கோரிய போது நாட்டை விட்டு செல்ல தயாரான அவர் தற்பொழுது தான் ஓர் இந்தியன் என மார் தட்டி பேசுவது எவ்விதத்தில் நியாயம்?

அதிலும் முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் பகுதிக்கு சென்று இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து மதத்தைச் சார்ந்தவன் என பொது வேளியில் பேசுவது கண்டிக்கதக்கதாகும். இதே கமல்ஹாசன் ஈஸடர் பண்டிகையன்று ஶ்ரீ லங்காவில் நிகழ்ந்த வெடி குண்டு சம்பவங்கள் குறித்து பேச தயாரா? என்ற கேள்விகளை முன்வைத்துள்ளார்.

மேலும் இனி அவர் பொது இடங்களில் பிரச்சார கூட்டம் நடத்துவதற்கும் பேசுவதற்கும் அரசாங்கமும் தேர்தல் ஆணையமும் தடை விதிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அவரைப் போலவே பிரபல திரைப்பட நடிகர் விவேக் ஓப்ராயயும் கமலின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு சிறந்த கலைஞன் இது போன்ற தன்மையற்ற கருத்துக்களைக் கூறுவது வேதனையளிக்கிறது. கலைக்கும் தீவிரவாதத்திற்கும் ‘மதம்- இனம்’ கிடையாது. இது போன்ற கருத்துக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி தேசத்தில் பிளவை ஏற்படுத்தாதீர் என தனது ‘டிவிட்டர்’ சமூக வலைத் தலப்பக்கத்தில் கருத்து பதிவேற்றம் செய்துள்ளார்.

இவர்கள் மட்டுமல்லாது இன்னும் பல அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் இக்கருத்திறகு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தங்களின் கண்டனத்தை சமூக வலைத் தலங்களில் கருத்து பதிவு செய்து வருகின்றனர்.

இருந்த போதிலும் கமல் தரப்பு இவ்விவகாரம் குறித்து இது வரை எந்தவொரு மறுப்பு அல்லது மன்னிப்பு கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker