Latestஉலகம்

காதல் மோசடிக் கும்பல் – இரு நைஜீரியர்கள் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டனர்

சிங்கப்பூர், மே 14 – பெண்களைக் காதல் வலையில் சிக்க வைத்துப் பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த இரு நைஜீரிய ஆடவர்களைக் கைது செய்த மலேசிய போலீசார், அவர்களை விசாரணைக்காக சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தனர்.

2017ஆம் ஆண்டு நைஜீரியர்களான ஒலடயோ ஒபெயெனி அவோலொலா (34) மற்றும் குபோலஆன் அயோஅமி அவொலொலா (37) ஆகிய இருவரும் சிங்கப்பூர் பெண்ணான பெங் குய் என்பவரை ஏமாற்றி 46,500 சிங்கப்பூர் டாலர் (ரிம. 141,771)ஐப் பெற்றுள்ளனர்.

கடந்தாண்டு ஜனவரி 18ஆம் தேதி சுஹைலி சுபர்ஜோ எனும் சிங்கப்பூர் பெண்மணியின் வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தை செலுத்த வைத்ததாக அந்த இருவர் மீதும் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், இரு சிங்கப்பூர் பெண்களிடமிருந்து மொத்தம் 85,700 சிங்கப்பூர் டாலரை (ரிம. 261,286 ) சுஹைலி சுபர்ஜோவின் வங்கிக் கணக்கில் செலுத்த வற்புறுத்திய பின்னர், அந்தப் பணத்தை அந்த இருவரும் பெற்றிருப்பதாகவும் சொல்லப்படுகிறது,

ஏப்ரல் 16 தேதி கோலாலம்பூரில் கைது செய்யப்பட்ட அந்த இருவரும், சிங்கப்பூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அது பற்றிக் குறிப்பிட்ட சிங்கப்பூர் போலீசார், அனைத்துலக நிலையில் காதல் மோசடி சம்பவம் காரணமாக இரு நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதன் முறை என்றும், அம்மாதிரியான 660 காதல் மோசடி புகார்களைத் தாங்கள் பெற்றிருப்பதாகவும் அதில் ரிம. 83.8 மில்லியன் பண மோசடி சம்பந்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நைஜீரியர்கள் மே 21இல் சிங்கப்பூர் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படுவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker