Latestமலேசியா

ஜெனிவா மாநாட்டில் துணைப் பிரதமர் தலைமையில் மலேசிய குழு !

ஜெனிவா, மே.14- சுவிட்சலாந்தில் நடைபெறும் 6ஆவது பேரிடர் அபாய தடுப்பு சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசிய பேராளர் குழுவிற்கு துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ வான் அஜிஸா தலைமையேற்கிறார்.

இன்று துவங்கி மே 16ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு ஜெனிவா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறும் இம்மாநாட்டின் அறிமுக விழாவில் துணைப் பிரதமர் இரு அதிகாரப்பூர்வ உரைகளை நிகழ்த்தவுள்ளார். நாளை நடைபெறும் மாநாடின் அறிமுக விழாவில் கலந்துக் கொள்ளும் அவர் அங்கு முதல் உரையை நிகழ்த்துவார்.

அதன்பின் நாளை மாலை நிகழ்வில் “பேரிடர் அபாயத்தை குறைப்பதில் பெண்களின் தலைமைத்துவம்” என்ற தலைப்பில் அவர் சிறப்புரையாற்றவுள்ளார் என ஜெனிவாவில் உள்ள ஐ.நா சபை அலுவலகத்தின் நிரந்திர பிரதிநிதி டத்தோ அம்ரான் மொகமட் ஸின் தெரிவித்தார்.

மேலும் நாளை மறுநாள் இம்மாநாட்டில் நடைபெறும் அமைச்சர்களுக்கான வட்ட மேசை கூட்டத்திலும் டத்தோஶ்ரீ வான் அஜிஸா கலந்து கொண்டு அக்கூட்டத்திற்கு ஏற்ற தலைப்பில் உரை நிகழ்த்துவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker