Latestசினிமா

தாயின் கோரிக்கையை நிறைவேற்றிய மாதவன்

சென்னை,மே.14- உலகெங்கும் கோலாகலமாக அன்னையர்  தினம் கொண்டாடப்பட்டது. அவ்வகையில் நடிகர் மாதவன்  அவரது தாயின் நீண்ட நாட்களாக அவரிடம் கேட்டு வந்த  கோரிக்கை ஒன்றை நிறைவேற்றி வித்தியாசமான பரிசு  ஒன்றை அளித்துள்ளார்.

தற்போது ‘ராக்கெட்ரி’ என்கிற படத்தில் விஞ்ஞானி நம்பி  நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மாதவன்.  இதற்காக கடந்த 2 ஆண்டு காலமாக தாடி வளர்த்து வந்தார்.

அவரை சுத்தமாக தாடி எடுத்து சேவ் செய்யுமாறு அவரது  அம்மா அடிக்கடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் விஞ்ஞானியின் இளம்  கதாபாத்திரத்துக்கு மாற உள்ள மாதவன் சுத்தமாக தாடி எடுத்து அந்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா  பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மகிழ்ச்சியான அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா  கடைசியாக நீங்கள் கேட்டுக் கொண்டபடி ஏதோ இரண்டு  ஆண்டுகளுக்கு பிறகு சுத்தமாக தாடி எடுத்து சேவ் செய்து  விட்டேன். இப்போது இளம் நம்பி நாராயணன் பிரான்சுக்குச்
செல்ல தயாராகி விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker