Latestமலேசியா

மலேசியாவில் “மங்கிபோக்ஸ்” நோய் அபாயம் மிக குறைவு ! – இருப்பினும் விழிப்பு நிலையில் அரசாங்கம்

கோலாலம்பூர்,மே.14- “மங்கிபோக்ஸ்” என்றழைக்கப்படும் வினோத குரங்கு அம்மை நோய் மலேசியாவில் பரவும் அபாயம் மிக குறைவு. இருப்பினும் அரசாங்கம் சுகாதாரா பாதுகாப்பு அம்சத்தில் விழிப்பு நிலையில் உள்ளது என சுகாதாரத் துறை துணையமைச்சர் டாகர் லீ பூன் சாய் தெளிவுப்படுத்தினார்.

சிங்கப்பூரில் வாழும் நைஜீரியா நாட்டு பிரஜை ஒருவருக்கு இந்நோய் கண்டிருப்பாது அண்மையில் உறுதி செய்யப்படுள்ளது. தன் தாய் நாட்டிற்கு சென்று வந்த அவருக்கு இந்நோய் வந்துள்ளது. இதனால் அந்நாட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிறருக்கு இந்நோய் தொற்றிக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய அங்கு பாதுகாப்பு அம்சங்கள் வலுவாக்கபட்டுள்ளது.

இந்நிலையில் மலேசியாவில் அந்த நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. ஆனால் அதனை நாம் துச்சமாக எண்ணி விட முடியாது. எனவே இங்கும் இந்நோய் குறித்த பாதுகாப்பு அம்சங்களை செயல்ப்படுத்தியுள்ளோம். அதனை எதிர்கொள்ள சுகாதார அமைச்சு எந்நேரமும் விழிப்புணர்வு நிலையில் உள்ளது என பீகோன் மருத்துவமனையில் நடைபெற்ற ஹால்சிடன் ரேடியோதெரப்பி இயந்திர சிகிச்சை அறிமுக விழாவில் கலந்து கொண்ட அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மலேசியாவிற்கு வரும் மத்திய- மேற்கு ஆப்பிரிக்கா கண்டத்தைச் சார்ந்த மக்களுக்கு காய்ச்சல், தோல் வடுக்கள் என இந்த “மங்கிபோக்ஸ்” நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என்றும் துணையமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker