Latestஇந்தியா

விடுதலைப்புலிகளுக்கு மேலும் ஐந்து ஆண்டு இந்தியா தடை

புதுடில்லி, மே. 14- இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை அமல் படுத்த இந்திய அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.

விடுதலைப் புலிகளின் ஆதரவு இயக்கங்கள் தொடர்ந்து தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கான முயற்சிகள் பலவற்றை முன்னெடுத்து வருகின்றன என்ற காரணத்தின் அடிப்படையில் இந்திய அரசாங்கம் இந்தத் தடையை நீட்டித்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவைப் பெருக்க சில அமைப்புக்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு இந்திய அரசாங்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு தடையை நீடித்து இருக்கிறது. அதாவது 2019ஆம் ஆண்டு தொடங்கி  2024 ஆம் ஆண்டு வரையில் இந்தத் தடை  நீடிக்கும் என்று இந்திய உள்துறை அமைச்சு அறிவித்திருக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker