Latestமலேசியா

விமானத்தின் டயர் பகுதியில் ஒளிந்து பயணம் – இந்தோனேசியர் கைது

ஜோர்ஜ் டவுன், மே 14 – தனது சொந்த ஊருக்குச் செல்ல விமானத்தின் டயர் பகுதியில் ஒளிந்து (லேண்டிங் கியர்) பயணித்த  இந்தோனேசியர் ஒருவர் பினாங்கு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

நேற்று காலை 10 மணியளவில் விமான பொறியியல் ஊழியர் ஒருவர் பராமரிப்பு வேலை  செய்து கொண்டிருந்தபோது, அந்த இந்தோனேசியர் அங்கு ஒளிந்து கொண்டிருப்பதைக் கண்டார்.

பாதுகாப்புக் குழுவினர் அழைக்கப்பட்டு அந்த இந்தோனேசியர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கோழிப் பண்ணையில் வேலை செய்துவரும் அந்த நபர்,  சொந்த ஊரான மேடானுக்குச் சொல்ல டிக்கட் வாங்க இயலாத நிலையில், அந்தப் புதிய வகையான பயணத்திற்கு முயற்சித்துள்ளார்.

தேன்மேற்கு மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் ஜெஃப்ரி மாட் ஸின் அதனை உறுதிப்படுத்தியதோடு,  1959ஆம் ஆண்டு பாதுகாப்பு இட சட்டத்தின் வழி இச்சம்பவம் விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker