Latestமலேசியா

அடிப்பின் மரண விசாரணை மருத்துவ வேனை வைத்துப் பரிசோதனை

ஷா ஆலம், மே 15 – தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மரண விசாராணையில் மருத்துவ சேவை வாகனத்தின் வேகத்தை வைத்து அவரின் காயத்திற்கான செய்முறை விளக்கம் தரப்பட்டது.

இதற்கு முன்னர் கோலாலம்பூர் தடயவியல் நிபுணர் டாக்டர் அகமட் ஹஃபிசாம், அடிப் வேனில்  இருந்து சில நபர்களால் வெளியே இழுத்துத் தாக்கப்படவில்லை என்றும் அவர் பின்னால் நகர்ந்த வேனில் குதித்தபோது, கீழே விழுந்து விலா எலும்புகள்  முறிந்திருக்கலாம்  என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அவரின் அந்த கூற்றினை கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் தடயவியல் இலாகா தலைவர் டாக்டர் முகமட் ஷாவும் உறுதிப் படுத்தியிருந்தார்.

ஆனால், வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சு அழைத்திருந்த தடயவியல் முன்னாள் பேராசிரியர் டாக்டர் ஷாரோம் அப்துல் வாஹிட் தமது சாட்சியத்தில், வேனுக்கு வெளியே இருந்த சில நபர்கள் அடிப்பை வேனிலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துத் தாக்கியதால்தான் அவரின் விலா எழும்புகள் முறிந்திருக்கக்கூடும் என சாட்சியமளித்திருந்தார்.

அவர்கள் இருவரின் சாட்சியங்கள் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டு இருந்ததால், டாக்டர் அகமட் ஹஃபிசாம் மீண்டும் அழைக்கப்பட்டு விளக்கம் தர  பணிக்கப்பட்டார். இன்று காலை 10.15 மணிக்கு நீதிமன்றத்தின் கீழ்த்தளத்தில் அந்த வேனை  ஒரு கிலோ மீட்டருக்கு 8 மற்றும் 17 கி.மீட்டர் வேகத்தில்  பின்னால் ஓடவிட்டு டாக்டர் ஹஃபிசாம் விசாரணை நீதிபதியான ரோஃபியா முகமட்டின் முன்னிலையில் சோதனைகளைச் செய்து காட்டினார்.

அந்தச் பரிசோதனை சிறிது தடங்கலுக்குப் பின்னர் 11.30  மணி வரை செய்து காட்டப்பட்டது. அதன் பின்னர் அவரை  அமைச்சு,  அடிப்பின் குடும்பத்தினரைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்வர். கடந்தாண்டு நவம்பர் 27ஆம் தேதி சுபாங் ஜெயா  சீபீல்டு ஆலயத்தில் நடந்த கவரத்தின் போது பணியில் இருந்த அடிப் காயமடைந்த காரணத்தை அறிய அந்த மரண விசாரணை ஷா ஆலம் நீதிமன்றத்தில் தற்போது நடந்து வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker