Latestமலேசியா

அன்வாரை விமர்சிப்பதா? பொறுப்பற்ற செயல்! -அஸ்மின்

கோலாலம்பூர், மே 15 – டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை விமர்சித்துள்ள பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ தக்கியுடின் ஹசானின் விமர்சனம் பொறுப்பற்ற தனம் என டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளார்.

அன்வாருக்கு முழு மன்னிப்பு வழங்கப் பட்டுள்ளதால், தக்கியுடினின் தரக்குறைவான விமர்சனம் நேர்மையைப் பிரதிபலிக்கவில்லை என  பிகேஆரின் துணைத் தலைவரான அவர் சுட்டிக்காடினார்.

அன்வார் மீதான குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டிருந்ததை மக்கள் அறிவார்கள். இறுதியில் அவருக்கும் பேரரசரின் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நமக்குப் பல்வேறு கருத்து வேறுபாடுகள்  இருந்தாலும், நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவை அனைவரும் மதிக்க வேண்டுமென நேற்று ரிஸ்டாவின்  நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அஸ்மின் அவ்வாறு குறிப்பிட்டார்.

சண்டாக்கான் இடைத்தேர்தல் பரப்புரையில் உரையாற்றிய தக்கியுடின், முன்னாள் குற்றவாளியான அன்வாரை பிரதமராக மக்கள் ஏற்க விரும்புவார்களா?என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனிடையே மற்ற கட்சி விவகாரங்களில் பாஸ் தலையிடுவதைத் தவிர்த்து, உள்பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென அஸ்மின் கேட்டுக் கொண்டார்.

அண்மையில், ஹாடி அவாங்கின் மருமகனான ஸஹாருடின் முகமட், அக்கட்சியில் உள்ள ஒரு குழுவினர்  மற்ற கட்சியிடமிருந்து அரசியல் நிதி பெற்றிருப்பதை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker