Latestமலேசியா

அமைச்சர் வேதாவுக்கு கூடுதல் பாதுகாப்பு! -ஹிண்ட்ராப் கோரிக்கை

கோலாலம்பூர், மே.15- நோன்பு மாதத்தில் மலேசியாவில் பல பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள சதி திட்டம் தீட்ட வந்த 4 நபர்களை காவல்துறை கைது செய்ததை அடுத்து தேசிய ஒற்றுமை, சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் வேதமூர்த்திக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென ஹிண்ட்ராப் அமைப்பு அரச மலேசிய காவல் படையிடம் கோரிக்கை முன்வைத்தது.

கடந்த நவம்பர் மாதம் சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தில் மரணமுற்ற தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரணத்திற்கு பலி வாங்குவதாக கோரி அந்நபர்கள் இங்குள்ள வழிபாட்டு தலங்களில் வெடி தாக்குதல்கள் நடத்தவி ருந்தனர்.மேலும் இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தியதாக காரணம் காட்டி முக்கிய பிரமுகர்களை கொல்லவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

நாட்டின் அமைதியை சீர்குலைக்கவிருந்த அவர்களை உரிய நேரத்தில் காவல்துறை கைது செய்தது பாராட்டுதல்குரியது. அதே சமயம் தற்பொழுது அமைச்சர் வேதமூர்த்திக்கு கூடுதல் பாதுகாப்பு அவசியமாகிறது என ஹின்ட்ராப் அமைப்பின் சட்ட ஆலோசகர் கார்த்திக் ஷான் கருத்துரைத்தார்.

கடந்த 14ஆவது பொது தேர்தலுக்கு முன் நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் அவர் துன் மகாதீரை சந்திக்கவிருந்த சமயத்தில் கூட சில தரப்பினர் அமளியில் ஈடுப்பட்டனர். இது மட்டுமல்லாது பன்னாட்டு இனப் பாகுபாட்டிற்கு எதிரான ஐ.நா மன்றத் தீர்மான (ஐசெர்ட்) விவகாரத்திலும் முகமட் அடிப் மரண விவகாரத்திலும் அமைச்சர் மீது சர்ச்சை கிளப்பி விடப்பட்டது.

இச்சூழ்நிலையில் இந்த கைது சம்பவம் ஹிண்ட்ராப் ஆதரவாளர்களை அச்சப்படுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தேசிய காவல்படை தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹமீட் படோர் எங்களின் கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கார்த்திக் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker