Latestமலேசியா

ஊழல் அற்ற நாடாக மலேசியா விளங்கும்! – வான் அஸீசா

ஜெனிவா,மே.15- உலக அரங்கில் மலேசிய ஊழல் அற்று ஒருமைப்பாடு நிறைந்த நாடாக விளங்க வேண்டும் என்பதே நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் எண்னமாகும் என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ வான் அஜிஸா கருத்துரைத்தார்.

நேற்று ஜெனிவாவில் துவங்கப்பட்ட  6ஆவது பேரிடர் அபாய தடுப்பு சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள அவர் சுவிட்சலாந்திற்கு 3 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு அவர் அங்குள்ள மலேசியர்களுடன் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்பொழுது தமதுரையில் மேரற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த 14ஆம் பொது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தவுடன் நாங்கள்,  ஊழலை எதிர்கொள்ள தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதன் அடிப்படையில் 2019-2023 ஆண்டுகளுக்கான தேசிய ஊழல் தடுப்பு பெருந்திட்டத்தை இவ்வருடம் துவக்கத்தில் அறிமுகப் படுத்தி உள்ளோம். மேலும் ஆட்சிமுறை- ஒருமைப்பாடு- ஊழல் தடுப்பு மையத்தை துவக்கியுள்ளோம்.

நாட்டின் பொருளதார நிலைமையின் அடிப்படையில் தற்பொழுது நாங்கள் மிகவும் சிக்கனமான முறையில் ஆட்சி நடத்த வேண்டிய சூழல் உள்ளது. இருப்பினும் மக்களின் நலனை நாங்கள் என்றும் கருத்தில் கொண்டு தான் செயல்படுகின்றோம்.

இதனிடையே, 60 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆட்சி மாற்றம் எவ்வித சர்ச்சையின்றி அமைதியாக நடைபெற்றதற்கு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். ஆனால் இந்த மாற்றத்தை முழுமையாக ஏற்கும் மன்பான்மை இன்னும் சில தரப்பினருக்கு வரவில்லை. இதனால் நாங்கள் முன்வைக்கும் சில திட்டங்களயும் செயல்பாடுகளையும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே கடந்த பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியை தேர்வு செய்த அனைத்து தரப்பினருக்கும் அவர் தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால் கீழ் நோக்கி சென்ற நாட்டின் விதியை உருமாற்றியிருக்க  முடியாது. தேர்தலில் புரட்சி ஏற்படுத்திய வாக்காளர்கள் குறிப்பாக வெளி நாடுகளில் வசித்தாலும் தவறாமல்  வாக்கு செலுத்தியவர்களும் தான் உண்மையான போராளிகள் எனவும் துணைப் பிரதமர் பாராட்டி பேசினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker