Latestஇந்தியா

ஓர் இந்து, தீவிரவாதியாக இருக்க முடியாது! -மோடி

புதுடில்லி,மே.15- எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என மக்கள் நீதி மையம் தலைவர் கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். மே 19ஆம் தேதி நடைபெற உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை யொட்டி அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் நாதுராம் கோட்சே. மேலும் நான் காந்தியின் கொள்ளுப்பேரன் அந்த கொலைக்கு பின்னணி கேட்க வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

கமல் பேச்சு குறித்து காவல் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.இந்நிலையில் எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரதமர், உலகமே ஒரு குடும்பம் என்பது தான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை. அது எந்த ஒரு நபரையும் காயப்படுத்துவது,கொலை செய்வது அனுமதிக்காது. அதனால் எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் இந்துவாக இருக்க முடியாது என தெரிவித்துள்ளார் என்று பிரதமர் மோடி இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker