Latestமலேசியா

கஞ்சில் காரில் மீது மூர்த்தாப்பா- மேக்கி! வாடிக்கையாளர்களை கவர்ந்த வியாபாரி!

பத்தாங்காலி, மே15 – நோன்பு காலமான இம்மாதத்தில் JRD பாசார் ரமடானில் வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் 660cc கஞ்சில்  காரின் மேல் மூர்த்தாப்பா (ரொட்டி சானாய்) மற்றும் மேக்கி விற்கும் வியாபாரி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

65 வயது நிரம்பிய யாஹ்யா சே அன் ஒரு லோரி ஓட்டுனர் ஆவார்.  2012ஆம் ஆண்டிலிருந்து  இவர் மூர்த்தாப்பா, மேக்கி  விற்கும் வர்த்தகத்தை  பகுதி நேர தொழிலாகக் கடந்த 30 ஆண்டுகளாகச்  செய்து அவருடைய 6 பிள்ளைகளை வளர்த்தும் வருவதாகக் குறிப்பிட்டார்.

தொடக்கக் காலத்தில் யாஹ்யாவும் அவருடைய மனைவி நோராய்னி அப்துல்லாவும் (வயது 60) இவ்வியாபாரத்தை அருகிலுள்ள எண்ணெய் நிலையத்தில்,  மேஜை மற்றும் கூடாரமிட்டு செய்து வந்ததாகக் கூறினர்.

மேலும், தொழிலில் சிறிய லாபத்தைக்  கண்ட பின்னர், அவருடைய நண்பரின் கஞ்சில்  காரை வாங்கி, அதனை ஒரு நடமாடும் கடையாக மாற்றினர். மேலும் இதனால் அவர்களுக்கு மேஜை மற்றும் கூடாரத்தை எடுத்துச் செல்லும் சிரமம் குறைந்ததாகக் குறிப்பிட்டார்.

ஓய்வு நேரங்களில் அவர் ஒரு பட்டறையைக் கவனித்து வந்ததாகவும் அப்பட்டறையில் வாகனத்தின் பின் பகுதியை வெட்டுவதற்கானப் பொருள்கள் இருந்ததால்,  அவர் கஞ்சில் காரின் பின்பகுதியை வெட்டி,  சமைக்கும் இடமாக மாற்றியதாகத் தெரிவித்தார்.

மேலும், அக்காரை ஒரு முழுமையான நடமாடும் கடையாக வடிவமைத்ததாக யாஹ்யா  கூறினார். இதனையடுத்து, இக்காரை கடந்த 2 வருடங்களாக அவர் வியாபாரத்திற்குப் பயன்படுத்தி வருகிறார்.  இதனால்,  எண்ணெய் மற்றும் மற்ற செலவுகளை அவரால் சிக்கனப்படுத்த முடிவதாகக் குறிப்பிட்டார்.

காரில் எண்ணெய் கலனைக் கூட அவர் 2 லிட்டர் எண்ணெய் கலனாக மாற்றி, காரின் முன்பகுதிக்கு  இடம் மாற்றியதாகக்  கூறினார்.

மூர்த்தாப்பா செய்வதற்கு உபயோகிக்கப்படும் அடுப்பு மற்றும் மற்ற பொருள்களையும் அவர் காரின் மீது ஒரு தடிப்பான கட்டை வைத்து, விற்று வருவதாக செய்தியாளரிடம் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker