Latestமலேசியா

கடன் பிரச்சினையால் மோதல்: ஆடவருக்குக் கத்திக் குத்து!

கோலாலம்பூர், மே 15 – ஐந்து நபர்களை எதிர்த்துப் போராடிய நபர்  ஒருவர் கத்திக்குத்துக்கு ஆளானார். நேற்று செவ்வாய்க்கிழமை பத்து கேவ்ஸ், தாமான் பிங்கிரானில் உள்ள வீட்டில் இரவு  8.30 மணியளவில் ஐவர்  அங்கிருந்த ஆடவரைத் தாக்கியுள்ளனர்.

அது பற்றிக் குறிப்பிட்ட கோம்பாக் மாவட்ட போலீஸ் ஏசிபி சம்சோர் மாரோப், இந்த ஐவரும்  வீட்டிலிருந்த  நபர்  ஒருவருடன்  மோதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, கத்தியால் குத்தப்பட்டதோடு அவரின் தங்கச் சங்கிலி, கைப்பேசி மற்றும் காரின் சாவி முதலியவை  அபகரித்துச் செல்லப்பட்டன.

சம்பந்தப்பட்ட நபர் செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் திருடப்பட்ட உடமைகள்மீடகப்பட்டுள்லன.  பெறப்பட்டுள்ளன.

16லிருந்து 22 வயது வரையிலான அந்த 5 பேரும் பகாங், ரவுப்பில் கைது செய்யப்பட்டு செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

கடன் பிரச்சினையினால் அந்த மோதல் ஏற்பட்டிருப்பதாகவும் அது குற்றவியல் சட்டம் பிரிவு 394இன் கீழ் விசாரணை செய்யப்படும் எனவும் சம்சோர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker