Latestசினிமா

கணவரின் அசிங்கத்தனம்; இருண்டது என் வாழ்க்கை – நடிகை ராகினி

ஐதராபாத், மே. 15 – பிரபல தெலுங்கு டிவி தொடர் நடிகை ராகினி தனது இருண்ட வாழ்க்கை குறித்து அதிர்ச்சியான சம்பவங்களை பட்டியலிட்டு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது; எனக்கு சின்ன வயதிலேயே திருமணம் நடந்து விட்டது. இதனால் பரிதாபமான நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்.

எனது கணவர்,குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைப்பவர். அதனால் திரைத்துறையில் இருக்கும் ஆண்கள் பலருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள என்னை வற்புறுத்தினார்.

அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. அந்த இருண்ட வாழ்க்கையில் வெளியேற நினைத்தேன். ஒரே ஆண்டிலேயே அவரிடமிருந்து பிரிந்து விட்டேன்.

சாமானிய மனிதர்களுக்கு நடிகர்களையும் நடிகைகளையும் கண்டாலே ஒரு தப்பான எண்ணமும் பார்வையும் இருக்கிறது. சினிமாக்காரர்கள் என்றாலே தவறானவர்கள் என்று நினைக்கின்றனர்.

அதுவும் நடிகைகள் என்றால் பொதுவாக மக்களின் எண்ணங்கள் போகும் போக்கு குறித்து சொல்லவே வேண்டாம். எல்லாத் துறைகளிலும் நல்லவர்களும் இருக்கின்றனர்.

மோசமானவர்களும் இருக்கின்றனர் அதற்காக ஒட்டுமொத்த சினிமா துறையினர் மோசமானவர்கள் என கண் கொண்டு பார்ப்பது தவறானது என்று கூறி இருக்கிறார் நடிகை ராகினி.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker