Latestசினிமா

கமலுக்கு எதிரான டில்லி வழக்கு தள்ளுபடி!

புதுடில்லி,மே.15- பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் பாஜக சார்பில் வழக்கறிஞர் அஸ்வின் உபாத்யாயா டில்லி நீதிமன்றத்தில் கமலுக்கு எதிரான அவதூறு வழக்கு பதிவு செய்தார. மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாட்டில் நடந்த பிரச்சனைக்கு அங்கே வழக்கு பதியாமல் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் ஆனால் இந்த வழக்கை தவிர்த்து இந்து சேனா அமைப்பு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நாளை மதியம் 2 மணியளவில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker