Latestமலேசியா

காட்டுப் பன்றியை விழுங்கியதாக நம்பப்படும் மலைபாம்பு பிடிபட்டது !

பொந்தியான், மே.15- காட்டுப் பன்றியை விழுங்கியதாக நம்பப்படும்  மலைபாம்பு ஒன்றை பொது பாதுகாப்பு அமைப்பு (ஏபிஏ) உறுப்பினர்கள் பெக்கான் நேநாஸ், கம்போங் பா கலிப் பகுதியில் உயிருடன் பிடித்துள்ளனர்.

சுமார் 130 கிலோ எடையும் 5 மீட்டர் நீளமும் கொண்ட  அந்த மலைப்பாம்பை ஆற்றோரப் பகுதியில் பொதுமக்களின் உதவியோடு பிடித்ததாக  பொந்தியான் மாவட்ட பொது பாதுகாப்பு அமைப்பு  அதிகாரி கேப்டன் முகமட் நூர்ஹபிட்ஸுல் தெரிவித்தார்.

இன்று காலை 9.30 மணியளவில் பொதுமக்களின் அழைப்பின் பேரில்  நாங்கள் அப்பகுதிக்கு விரைந்தோம். ஆற்றோரத்தில் இருந்த அந்த பாம்பு மிக மூர்க்கதனகமாக செயல்பட தொடங்கியதால் அதனை பிடிக்க சுமார் 30 நிமிடங்கள் போராட வேண்டியிருந்தது.

பிடிக்கப்பட்ட அந்த மலைப்பாம்பு பொந்தியான் மாவட்ட பொது பாதுகாப்பு அமைப்பு அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பின்னர் அதனை ஜொகூர் மாநில வனவிலங்கு – தேசிய பூங்கா பாதுகாப்பு இலாகாவிடம் ஒப்படைக்கவுள்ளோம் என்றும் முகமட் நூர்ஹபிட்ஸுல் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker