Latestஇந்தியா

சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கொண்டு இயங்கும் இயந்திரம்; புதிய கண்டுபிடிப்பு !

கோயம்பத்தூர், மே.15 – சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய வகையில் இயங்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளார் தமிழ் நாட்டைச் சேர்ந்த பொறியிலாளர் ஒருவர்.

கோயம்பத்தூர், தமிழ்நாட்டைச் சேர்ந்த சௌந்தரராஜன் குமரசாமி என்பவர், சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கொண்டு பிராண வாயுவை  (Oxygen)  வெளியிடும் இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடுத்துள்ளார். அந்த இயந்திரம் இயங்குவதற்கு அவர் ஹைட்ரஜன் (hydrogen) வாயுவைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இம்மாதிரியான கண்டுபிடிப்பு உலகிலேயே இதுவே முதன்முறையாகும். ஆகவே, இந்தியாவில் முதல் முதாலாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று கனவு கண்டேன். ஆனால் என்னுடைய இந்த முயற்சிக்கு இந்திய அரசு  செவிசாய்க்காததால், ஜப்பான் அரசிடம்  அதனைப்  பரிந்துரைத்தேன் என்று அவர் கூறியதாக ஆசிய நியூஸ் இண்டர்நேஷனல் டுவிட்டர் வலைத்தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அத்துடன், கூடிய விரைவில் ஜப்பான் நாட்டில் தமது புதிய கண்டுபிடிப்பினை
அறிமுகப்படுத்தப் போவதாகவும்  அதில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது தமது 10 ஆண்டு உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி என அவர் கூறுகிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker