Latestஇந்தியா

டில்லி நீதிமன்றத்தில் கமல் மீது கிரிமினல் வழக்கு!

புதுடில்லி,மே.15-மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எஞ்சியுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே என பேசினார். இதை பாஜக கண்டித்துள்ளது.

கமல்ஹாசனின் கட்சி தடை விதிக்க வேண்டும். இல்லையேல்’ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என பாஜகவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியா தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் ஒன்று கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்து சேனா அமைப்பின் தரப்பில் டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்து மக்கள் மற்றும் மதங்களை வேதனைப் படுத்தும் விதமாக பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆதாயத்திற்காக அவர் பேசியுள்ளதை கண்டிப்பாக ஏற்க முடியாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் வழக்கை வரும் 16ஆம் தேதி விசாரணை மேற்கொள்வதாக நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. டில்லி மந்திர் காவல் நிலையத்திலும் கமல் மீது இந்து அமைப்பு புகார் தந்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker