Latestமலேசியா

தாயையும் மகளையும் வெளியே இழுத்துப் போட்டுவிட்டு, காரைக் திருடிச் சென்ற கொள்ளையர்கள் [VIDEO]

கிள்ளான், மே. 15- இங்குள்ள தாமான் மேவா பாரு என்ற இடத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று 2 ஆடவர்களால் கார் திருடப்பட்டது  சிசிடிவி வீடியோப் பதிவு சமூக வளைத்தலங்களில் வெகுவாகப் பரவி வருகிறது.

அந்தக் காரின் உரிமையாளர் தனது வீட்டின் முன் காரை பின்நோக்கி
செலுத்திக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இரு நபர்களில் ஒருவன் காரின் கதவை உடைத்துள்ளான்.

காரின்  கதவைத் திறந்தவுடன்,  அந்தக் காரினுள் இருந்த தாயையும் அவரின் மகளையும் இழுத்து கீழே  தள்ளிவிட்டு,  அந்தக் காரை திருடிச் சென்றுள்ளனர்.

போலீஸ் தற்போது அந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களைத் தேடிவருவதாகக் கிள்ளான் தென் மாவட்ட போலீஸ் தலைவர் சம்சூல் அமர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker