Latestமலேசியா

நடிகர் டத்தோ பாரிட் காமிலுக்கு 9 மாத சிறை!

பெட்டாலிங் ஜெயா, மே.15- போதை பொருள் பயன்படுத்தியதாக குற்ற சாட்டப்பட்ட உள்ளுர் திரைப்பட நடிகர் டத்தோ பாரிட் கமிலுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒன்பது மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இவர் போதைப் பொருள் உட்கொண்டதாக கடந்த வருடம் ஜனவரி மாதம் பெட்டாலிங் ஜெயா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு  1952 அபாயகர போதை பொருள் சட்டம் செக்‌ஷன் 15 (1) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது,

இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரெட் நீதிபதி நோர் அரிப்பின் ஹிஷாம் டத்தோ பாரிட் கமில் மீது சுமத்தப்பட்ட குற்றம் எந்தவொரு சந்தேகத்திற்கும் இடம் இல்லாமல் நிருபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு 9 மாத கால சிறை தண்டனை வழங்குவதோடு அவரை 2 வருட காலக் கட்டத்திற்கு போதை பொருள் மறுவாழ்வு மையத்தின் பார்வையில் வைக்கும்படியும் தீர்ப்பளித்தார்.

மேலும் இவ்வழக்கு தொடர்பிலான மேல்முறையீட்டு மனு காலக்கட்டத்தில் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்றும் நீதிபதி உத்திரவிட்டார். எனவே அவர் இன்று முதல் காஜாங் சிறைச் சாலையில் வைக்கப்படுபவார். இன்று வழக்கு விசாரணை நேரத்தில் தன் சார்பில் வாதத்தை முன் வைக்க பாரிட் கமிலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் மெளனமாகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker