Latestமலேசியா

தேடப்படும் 3 தீவிரவாதிகள்- மலேசியாவில் பதுங்கி உள்ளனர்! -ஐஜிபி படோர்

கோலாலம்பூர்,மே.15- அண்மையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய கும்பலின் இதர மூன்று பேர் இன்னும் நாட்டினுள் தான் பதுங்கி இருப்பதாக காவல்துறை சந்தேகிக்கிறது  என அரச மலேசிய காவல்படை தலைவர் டத்தோ ஶ்ரீ அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தில் மரணமுற்ற தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரணத்திற்கு பலி வாங்குவதாக கோரி ஐஎஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்புடையே நான்கு நபர்கள்  இங்குள்ள வழிபாட்டு தலங்களில் வெடி தாக்குதல்கள் நடத்தவி ருந்தனர்.

மேலும் இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தியதாக காரணம் காட்டி முக்கிய பிரமுகர்களை கொல்லவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

கடந்த மே 5ஆம் தேத் தொடங்கி 7ஆம் தேதி வரை நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் காவல் துறையைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு சிறப்பு பிரிவு (ஈ8)  அவர்களை திரெங்கானு , கிள்ளான் பள்ளதாக்கு பகுதிகளில் கைது செய்தது.

மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கியும் வெடிகுண்டு கருவிகளையும் கைப்பற்றிது. கடந்த ஜனவரி மாதம் ஒன்று சேர்ந்த இந்தக் கும்பலை  தற்பொழுதுசிரியாவில் வசித்து வரும் மலேசியரத் தீவிரவாதி ஒருவன் இயக்கி வந்ததாக தெரிகின்றது.

இக்கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் மூவரை காவல் துறை தற்பொழுது தேடி வருகின்றது. பீடோங் கெடாவைச் சேர்ந்த மலேசியர்களான ஷாசானி மஹ்சான் (வயது 21), முகமட் நூருள் அமின் அஸிஸான் (வயது 27), இறுதியாக பந்திங்கில் வசித்து வந்த பாதிர் திர் எனும் இந்தோனேசிய பிரஜை ஆகியோர் தேடப்பட்டு அவரும் அம்மூவர் ஆவர் என  டத்தோஶ்ரீ படோங் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker