Latestமலேசியா

நஜிப்பின் எஸ்ஆர்சி ஊழல் வழக்கு: ஏஹ்சான் பெர்டானாவின் ரிம்.42 மில்லியன் நஜிப்பின் வங்கிக் கணக்கில் வரவு

கோலாலம்பூர், மே 15 –  நிறுவன சமூக கடப்பாட்டுத் திட்டத்தை மேற்கொள்ள ஏஹ்சான் பெர்டானா நிறுனத்தின் 42 மில்லியன் ரிங்கிட், முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் கணக்கில் செலுத்தப்பட்டதாக இன்று நடந்த வழக்கின் சாட்சியத்தில் தெரிவிக்கப் பட்டது.

ஆம்பேங்கின் முன்னாள்  கணக்கியல் அதிகாரியான அய்ஷா கஸாலி(வயது 37) என்பவர் தமது சாட்சியத்தில் ஏஹ்சான் பெர்டானா நிறுனத்தின்  நிர்வாக இயக்குநர் டத்தோ ஷம்சுல் அன்வார் சுலைமான் என்பவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மூன்று தவணைகளில் அந்தப் பணம் நஜிப்பின் வங்கிக் கணக்கில் 2014 டிசம்பர் 26இல் இருந்து 2015 பிப்ரவரி 9 வரை செலுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஷம்சுல் தமக்கு மின்னஞ்சல் வழியாக  அனுப்பிய உத்தரவின்படியே தாம் அந்த நிதி பரிமாற்றத்தைச் செய்ததாக அவர் தெரிவித்தார். ஏஹ்சான் பெர்டானா என்பது 1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்ஆர்சியின்  சமூக கடப்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாகும்.

2014 டிசம்பர் 26இல் 27 மில்லியன் தொகை   நஜிப்பின் வங்கிக் கணக்கான 211-202-201188-0 இல் செலுத்தப்பட்டது.  பின்னர்  5 மில்லியன் ரிங்கிட்டானது 202-201190-6 எனும் அவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. பின்னர் 2015 பிப்ரவரி 9இல் டாக்டர் ஷம்சுலின் உத்தரவின் பேரில் மேலும் 10 மில்லியன் ரிங்கிட் பணம் நஜிப்பின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இதற்கு முன்னர் 1880 மற்றறும் 1906 எனும் எண்களில் முடிவுறும் வங்கிக் கணக்குகள் நஜிப்பின் பெயரில் பதிவு செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது. எஸ்ஆர்சியின் 42 மில்லியன் நிதியை நஜிப் சட்டவிரோதமாகப் பெற்றதாக  7 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker