Latestமலேசியா

நஜிப்பின் எஸ்ஆர்சி வழக்கு; ஏஹ்சான் பெர்டானா ஆண்டுக்கு ரிம 4 கோடி நிதியைப் பெற்றது

கோலாலம்பூர், மே 15- நிறுவன சமூகக் கடப்பாட்டுத்  திட்டங்களை மேற்கொள்வதற்காக ஏஹ்சான் பெர்டானா நிறுவனம் ஆண்டுக்கு 4 கோடி ரிங்கிட்டைப் பெற்று வந்ததாக நஜிப் ரசாக் சம்பந்தப்பட்டுள்ள எஸ்ஆர்சி நிதி முறைகேட்டு வழக்கு  விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

யயாசான் 1எம்டிபியிடமிருந்து பெறப்படும்  2 கோடி ரிங்கிட்டானது மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளில்  அம்னோவும் தேசிய முன்னணியும் சமூகக் கடப்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள  தரப்பட்டன.

மேலும் யயாசான் ராயாட் 1மலேசியா-விடமிருந்து பெறப்படும் 2 கோடி நிதியானது அம்னோ மற்றும் தேசிய முன்னணி வெற்றி பெற்றற சீன  மற்றும் இந்தியர்கள் பெரும்பான்மை கொண்ட தொகுதிகளின் சமூகத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் . அதில் 5 மில்லியன் பணம் ஏஹ்சான் பெர்டானாவின் நிர்வாகச் செலவுக்கு ஒதுக்கப்படும்.

இன்று காலையில் நடந்த விசாரணையில், டிசம்பர்  2014 லிருந்து பிப்ரவரி  2015 வரையில்   ஏஹ்சான் பெர்டானாவின் பணம் 42 மில்லியன்  ரிங்கிட் 3 தவணைகளில் நஜிப் ரசாக்கின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டது. 27 மில்லியன், 5 மில்லியன் மற்றும் 10 மில்லியன் ரிங்கிட் ஆகிய தொகைகள் நஜிப்பின்  வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஏஹ்சான் பெர்டானா நிறுவனம் லாப நோக்கமில்லா நிறுவனம் என்றும் அது யயாசான் 1எம்டிபி மற்றும் யயாசான் ராயட் 1மலேசியா ஆகிய இரு அறக்கட்டளைகளில் இருந்து நிதியைப் பெற்று செயல்பட்டதாக சஷம்சுல் அன்வார் தெரிவித்தார்.

அந்த அறவாரியத்தின் வழி கிராமத் தலைவர்கள்,  சமயத் தலைவர்கள் ஆகியோரை ஹஜ்ஜு யாத்திரைக்கு அழைத்துச் செல்வது, வறியவர்களின் வீடுகளைப் பழுது பார்த்தல், மீனவர்களுக்கும் பூர்வீகக் குடியினருக்கும் உதவிகள் வழங்குவது போன்ற ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக  நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker