Latestமலேசியா

நாட்டின் மக்கள் தொகை 32.66 மில்லியனாக அதிகரிப்பு

கோலாலம்பூர், மே 15 – 2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மக்கள் தொகை 1.1 விழுக்காடு அதிகரித்து 32.66 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னர் அது 32.29 மில்லியனாக இருந்துள்ளது.

மேற்கண்ட மக்கள் தொகையில் 29.31 மில்லியன் பேர் பிரஜைகள் என்றும் 3.35 மில்லியன்பேர் குடிமக்கள் அல்லாதவர்களாவர். மொத்த குடிமக்களில் 16.96 மில்லியன் ஆண்களும் 15.80 மில்லியன் பெண்களும் உள்ளனர்.

சிலாங்கூரில் 6.54 மில்லியன் பேர் இருப்பதாகவும் அதுவே அதிக தொகை கொண்ட மாநிலம் என்றும் கூட்டரசுப் பிரதேசத்தில் ஆகக் குறைவாக 92,640 பேர் இருப்பதாகவும் புள்ளி விவர இலாகாவின் தலைவர் டாக்டர் முகமட் உஸிர் மஹிடின் தெரிவித்தார்.

2019 முதல் காலாண்டில் 14 வயதுக்கும் குறைந்த வயதினரின் எண்ணிக்கை 7.71மில்லியனிலிருந்து 7.69 மில்லியனாக குறைந்துள்ளது. நாட்டின் பிறப்பு விகிதம் 0.2விழுக்காடு குறைந்துள்ளதாகவும் ஆண் சிசுக்கள் 60,299ஆகவும் பெண் சிசுக்கள் 56,551 ஆகவும் முதல் காலாண்டில் பிறந்துள்ளன. 2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 42,647 இறப்புகள் நேர்ந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker