Latestமலேசியா

நான் பிரதமரான பின்னரும் துன் மகாதீர் அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகிப்பார் : அன்வார்

பாங்கி, மே.15 – நான் பிரதமர் பதவியை ஏற்ற பிறகும் அரசாங்கத்தில் துன் மகாதீர் ‘ராஜ தந்திரி’யாக முக்கிய பங்கு வகிப்பார் என பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்துரைத்தார். இன்று இங்கு நடைப்பெற்ற 2019ஆம் ஆண்டு தேசிய இளைஞர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டத்தோஶ்ரீ அன்வார் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

14ஆவது தேர்தல் காலக்கட்டத்தில் டத்தோஶ்ரீ அன்வார் சிறையில் இருந்ததால்  நம்பிக்கை கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக துன் மகாதீரை அறிவித்தனர்.
இரு ஆண்டுகளுக்கு பின் துன் மகாதீர் அப்பதவியை அவரிடம் வழங்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட தேதி நிர்ணயிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்பொழுது அப்பதவி வழங்குவது குறித்து பல்வேறு யூகங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

இது தொடர்பில் டத்தோஶ்ரீ அன்வார் கூறுகையில், பதவி மாற்றம் விவகாரத்தில் தேதி குறித்து துன் மகாதீர் எடுத்துள்ள முடிவினை நான் வரவேற்கிறேன். இவ்விவகாரம் தொடர்பான அவரின் விளக்கங்கள் ஏற்புடையதாக உள்ளது என்று கூறினாலும் அது பற்றி மேல் விபரங்கள் எதனையும் அன்வார் தரவில்லை.

அவர் தனது பணியை முழுமையாக செய்து முடிக்க நாம் இடையூறாக இருக்க கூடாது. பதவி ஒப்படைப்பு குறித்து நாங்கள் இருவரும் கலந்தாலோசித்து முறைப்படி முடிவெடுத்துக் கொள்கிறோம். அதே வேளையில் துன் மகாதீருக்கு அரசியல் அறிவு மிக அதிகம். நாட்டிற்கு அவர் வழங்கிய சேவையும் அளப்பறியது. நான் பிரதமராக பதவியேற்ற பின்னரும் அவர் அரசாங்கத்தில் ‘ராஜா தந்திரி’யாக செயல்படுவார் என தெரிவித்தார்.

மேலும் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தங்களது சொத்து முழு விவரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அறிவிக்க வேண்டும் என பிரதமரின் ஆலோசனையை நான் வரவேற்கின்றேன். மக்களுக்கான அரசு வெளிப்படையாக செயல்பட வேண்டும். எனவே இந்த திட்டத்திற்கு நாம் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் போர்ட்டிக்சன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்று 1 ஆண்டு (மே.16) ஆகி விட்டது குறித்து நிருபர் எழுப்பிய கேல்விக்கு பதில் அளித்த அவர், விடுதலை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஒரு வருட காலம் மிக விரைவாக சென்றுள்ளது. தற்பொழுது தாம் நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்கள், கட்சி உறுப்பினர்கள் என அனைவரையும் சந்தித்து வருவதாகவும் டத்தோஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker