Latestஉலகம்

நிலாவிலும் நிலநடுக்கம்: -நாசா கூறுகிறது!

வாஷிங்டன், மே. 15- நிலா சுருங்கி வருவதால், பூமியில் ஏற்படும் நிலநடுக்கம் போல நிலாவில் நிலநடுக்கமும் ஏற்படுகிறது என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா கூறியுள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள எல்.ஆர். ஓ எனப்படும் நிலவை சுற்றி விண்காலம் புகைப.படங்களை அனுப்பி வருகிறது.

நிலாவின் வடக்கு முனைக்கு அருகில் உள்ள பகுதியில் எடுக்கப்பட்ட 12,000 புகைப்படங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி நிலவின் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த வெப்பத்தின் அளவு குறைந்து வருகிறது.

பூமிக்கு அடியில் உள்ளது போன்ற பல்வேறு நிலப் படிவுகள் நிலாவில் கிடையாது. மேலும் அதன் மேற்குப் பகுதி மாற்றத்திற்கு உட்படக் கூடிய வெப்பநிலை குறைந்து வருவதால் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட 150 அடி அடி நிலவு சுருங்கி உள்ளது.

இவ்வாறு சுருங்கும் போது நிலாவில் வெடிப்புகளும் சுருக்கங்களும் ஏற்பட்டுள்ளன. உதாரணத்திற்கு திராட்சைப் பழத்தை காய வைத்தால் அதில் உள்ள ஈரத்தன்மை குறைந்து தோல் சுருங்கி உலர் திராட்சை ஆவது போல நிலவின் மேல் பகுதியில் சுருக்கம் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்காவில் அறிவியல் ஆய்வு பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. நாசாவின் சார்பில் 2024 நிலாவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

முதன்முறையாக பெண்ணை அனுப்பும் நாசா முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இத்திட்டத்திற்கு ஆர்திமிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. கிரேக்கர்களின் புராண பெண் கடவுளான ஆர்திமிஸ் என்ற புதிய திட்டத்திற்குபெயர் வைக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker