Latestமலேசியா

சுங்கை சிப்புட்டில் 11 வயது சிறுவன் நிர்வாணமாக்கி துன்புறுத்தல் – Video

சுங்கை சிப்புட், மே.15- பேராக் சுங்கை சிப்புட்டில் ,ஆடவன் ஒருவன் 11 வயது சிறுவனை நிர்வாணமாக்கி வீட்டின் முன்புறத்தில் துன்புறத்தும் காட்சிகளை கொண்ட காணொளி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆடவனை காவல்துறை விசாரணைக்கு அழைத்துள்ளது.

சுமார் 9 நிமிடம் 33 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளியில்  தாமான் டோவேன், ஜாலான் கம்போங் கோபோய் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்புறத்தில் சிறுவன் ஒருவன் நிர்வாண நிலையில் கைகளை உயர்த்தியபடி மண்டியிட்டுள்ளான். அச்சிறுவனை அந்த ஆடவன் திட்டுவது மட்டுமின்றி தன் கையில் இருக்கும் துடைப்பத்தால் ஓங்கி அடிப்பது போன்றும் பயமுறுத்துகின்றான்.

மேல் விவரங்களுக்கு காணொளி  செய்தியில் காண்க.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker