Latestஉலகம்

பப்புவா நியூகினியில் பயங்கர நிலநடுக்கம்!

கான்பெர்ரா,மே.15- பப்புவா நியூ கினியாவில் 7.5 அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தீவில் நேற்று மாலை 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

எனினும், சில மணிநேரங்களுக்குப் பின்னார் சுனாமி எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டது. பப்புவா நியூகினியா நெருப்பு வளையத்திற்குள் இருக்கும் ஒரு நாடாகும். இங்கு பூகம்ப உருவாக்க பாறைகள் மற்றும் எரிமலைகள் இருப்பதால் அடிக்கடி பெரிய அளவில் பூகம்பங்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் பப்புவா நியூ கினியா நாட்டின் கோக்கோபோ என்ற நகரின் வட கிழக்கே சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது பூமிக்கு அடியில் சுமார் பத்துகிலோமீட்டர் ஆழத்தில் உருவானது இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பூகம்ப மையத்தின் 1,000 கிலோ மீட்டர் சுற்றளவில் சுனாமி பேரலைகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டால்ம் பின்னர் ரத்தானது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker