Latestவிளையாட்டு

பிரபல ‘கேரம்’ வீராங்கனை ஜானவி லோரி மோதி மரணம்!

மும்பை,மே.15- கேரம் போட்டியில் ப மாவட்டம், மாநிலம்,தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு இதுவரை 68 பதக்கங்களை வென்ற  இளம் நட்சத்திரமான மாணவி ஜானவி மீது லோரி மோதிய விபத்தில் மரணமடைந்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த டோம்பிவிலி புல்லாவா என்ற பகுதியில் வசித்து வரும் மாணவி ஜனவி மோரோ. இவருக்கு வயது 20. இவர் கேரம் போட்டிகளில் 68 பதக்கங்களை வென்றவர். அதில் 36 பதக்கங்கள் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று தொடர்ந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் மாணவி ஜானவி. இந்நிலையில் நேற்று மாலை தன் வீட்டிலிருந்து எதிர்ப் புறமாக உள்ள சாலையை நோக்கி நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த லோரி ஒன்று அவர் மீது மோதியுள்ளது.

இதில் பலத்த காயங்களுடன் சரிந்து விழுந்த ஜானவி, இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஜானவியை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையில் இந்த விபத்து ஏற்பட அங்கு பணியாற்றிய போக்குவரத்து காவல்துறை அதிகாரி சரிவர சிக்னலை மாற்றி அமைக்காததை காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ஜானவி மரணம், இந்திய விளையாட்டு உலகை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஜானவியின் பெற்றோர் மீள முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker