Latestமலேசியா

மகாதீரின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது! -பெர்சே

கோலாலம்பூர், மே.15- பிரதமர் வேண்டுகோள் விடுத்த போதிலும் தேர்தல் பிரச்சார விவகாரத்தில் தாம் அமல்படுத்திய தடை உத்thaரவை தேர்தல் ஆணையம் எவ்வித தயக்கும் இன்றி தொடர வேண்டும் என பெர்சே 2.0 அமைப்பு கேட்டுக் கொண்டது.

இனி வரும் காலங்களில் அமைச்சர்களும் அரசாங்க பதவிகளை வகிக்கும் அரசியல்வாதிகளும் தங்களின் வேலை நேரத்தில்  தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லk கூடாது எனth தேர்தல் ஆணையம் அண்மையில் தடை விதித்தது. மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசாங்கத்தின் உடமைகளை பயன்படுத்தக் கூடாது என்றும் அந்த ஆணையம் உத்திரவிட்டது.

நேற்று புத்ரா ஜெயாவில் நடைபெற்ற 8 ஆவது ஊழல் தடுப்பு விவகாரம் தொடர்பான  அமைச்சரவை சிறப்பு செயற்குழு (ஜேகேகேஎம்ஏஆர்) கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் துன் மகாதீர், அமைச்சர்கள் தங்களின் பணி நேரத்தை தாண்டி வேலை செய்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள அவர்களுக்கு முறையான கால நேரம் கிடையாது. எனவே இத்தடை உத்தரவை தேர்தல் ஆணையம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.  இந்நிலையில் அவரின் வேண்டுகோளை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது. தேர்தல் ஆணைய தலைவர் அஷார் ஹருண் இம்முடிவினில் உறுதியாக இருக்க வேண்டும். பொதுவாக தங்களின் பணி வட்டாரத்தை தவிர்த்து இதர இலாகாவின் அமைக்குள் அரசியல்வாதிகள் தலைவிடக் கூடாது பெர்சே 2.0 வலியுறுத்தியது.

அது ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் பொது சபையின் 51/59 தீர்மானத்திற்கு எதிரானதாகும். மேலும் இது தேர்தல் ஆணையத்தில் பிரதமர் தலையீடு உள்ளது என்ற மனப்பான்மையை மக்களிடையே உருவாக்கி விடும் என பெர்சே 2.0 அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து  உட்பட ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தும் நாடுகளில் கூட இந்தத் தடை அமல்ப்படுத்தப்பட்டு வருகின்றது என சுட்டிக்காட்டியது பெர்சே.

இங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட செல்லும் அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் முன்னதாகவே விடுமுறை விண்னப்பித்துக் கொள்ளலாம். ஆனால் எவ்வித சூழ்நிலையிலும் அவர்கள் பிரச்சாரத்திற்கு அரசாங்க உடமைகளை குறிப்பாக வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் அது தெளிவுப்படுத்தியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker